ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் செனன் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பஸ் வண்டி ஒன்றும் பவுஸர் வண்டி ஒன்றும் நேர்க்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன விபத்தில் 6 பேர் காயம் : ஹட்டனில் சம்பவம்
Reviewed by Unknown
on
July 24, 2015
Rating:

No comments: