Mountain View Mountain View

கருவெலகஸ்வெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைதாகி பிணையில் விடுதலை





புத்தளம் கருவெலகஸ்வெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருவெலகஸ்வெவ 8 ஆம் கட்டை பகுதியில் மது போதையில் அமைதியின்மையைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டமை காரணமாக அவர் நேற்றிரவு 11.30 அளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த குறித்த முன்னாள் பிரதேச சபைத் தலைவருடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் எதிர்வரும் 28 ஆம் திகதி புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருவெலகஸ்வெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைதாகி பிணையில் விடுதலை   கருவெலகஸ்வெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைதாகி பிணையில் விடுதலை Reviewed by Unknown on July 25, 2015 Rating: 5

No comments: