Mountain View Mountain View

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரைக் கைது செய்யாமையைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரைக் கைது செய்யாமையைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

காலி – எல்பிட்டிய, திவிதுரை தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திவிதுரை பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுமியொருவரைக் கடந்த 16ஆம் திகதி இரவு, நபரொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாகவும் அவரைக் கைது செய்யுமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த சிறுமி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், வீட்டிற்குள் நுழைந்த குறித்த சந்தேகநபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்தும் சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்படாமையைக் கண்டித்து பிரதேசமக்கள் திவிதுரை தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு வருகை தந்த எல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடயங்களைத் தெளிவுபடுத்தியதன் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரைக் கைது செய்யாமையைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரைக் கைது செய்யாமையைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் Reviewed by Unknown on July 23, 2015 Rating: 5

No comments: