Mountain View Mountain View

மாவட்டத்தில் பிரரை தோற்கடிக்கும் ஹக்கீமின் முயற்சியினை வன்மையாக கண்டிக்கின்றேன்: ஹிஸ்புல்லாஹ்


 

              
அஹமட் இர்ஸாட்: மாவட்டத்தில் இருவருடைய அரசியல் சூனியமாக்கப்பட்ட நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அன்மையில் ஏறாவூரில் கலந்து கொண்ட கலந்துரையாடலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் மறைமுகமாக உங்களினதும் அமீர் அலியினதும் அரசியல் எதிர்காலத்தினை சுட்டிக்காட்டியமையினை நீங்கள் எவ்வாறு கருதுகின்றிர்கள்?
ஹிஸ்புல்லாஹ்: என்னை பொறுத்தமட்டில் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைமையானது பிரரை தோற்கடிக்கும் முயற்சியினை கைவிட வேண்டும். முஸ்லிம்கள் தரப்பில் அதிகமானவர்கள், அனுபவமிக்கவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்காககத்தான் 20வது சரத்தினை சமர்பித்த வேலையில் அதற்கு பாரிய எதிர்ப்பினை வெளிக்காட்டினோம்.
ஆனால் ரவூப் ஹக்கீம் மட்டக்களப்புக்கு வந்து என்னையும் அமைச்சர் அமீர் அலியையும் தோற்கடிப்பதற்காக அரசியல் செய்கின்றமையினை நினைக்கின்ற பொழுது அவர் முஸ்லிம் சமூகத்திற்காக உறுவாக்கப்பட்ட கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்க எந்த அருகதையும் அற்றவர் என்பதனை நிரூபிக்கின்றது.
அத்தோடு இம்முறை கிழக்கு மாகாணத்தில் ரவூப் ஹக்கீம் என்றும் இல்லாதவாறு தோற்கடிக்கப்படுவார் என்பது உறுதியாக கூறும் விடயமாக உள்ளது. அது அவருக்கு அல்லாஹ்வினால் கொடுக்காப்படும் தண்டனையாகவும் இருக்காலாம்.
மாவட்டத்தில் பிரரை தோற்கடிக்கும் ஹக்கீமின் முயற்சியினை வன்மையாக கண்டிக்கின்றேன்: ஹிஸ்புல்லாஹ் மாவட்டத்தில் பிரரை தோற்கடிக்கும் ஹக்கீமின் முயற்சியினை வன்மையாக கண்டிக்கின்றேன்: ஹிஸ்புல்லாஹ் Reviewed by Unknown on July 23, 2015 Rating: 5

No comments: