Mountain View Mountain View

அது ஒரு அழகிய மொபைல் காலம்...!



* ஒரு வாரம் ஆனாலும் சார்ஜ் தீரும் என்கிற
கவலை இருந்ததே இல்லை!

* காவேரி ஆற்றில் மூழ்கி எடுத்தும் ,பொன்மலை ஸ்டேஷன் தண்டவாளத்தில் தவறி விழுந்தும்,உடைத்தே தீரவேண்டுமென சண்டை ஒன்றில் போட்டு உடைத்தும் கூட, கை குலுக்கியபடி சிரிக்கும் மொபைல் அது !

* கீ போர்டே தேய்ந்து போகும் அளவிற்கு மெசேஜ் அனுப்பிய மொபைல் அது !

* எழுந்து யாரையாவது அடிக்க தோன்றும் அளவுக்கு அலறும் அலாரம் அது !

* காலை தொடங்கி நைட் வரை எல்லாவற்றிற்கும் குரூப்
மெசேஜ் அனுப்பியே கொல்ல உதவிய மொபைல் அது !

*பந்து போல கூட பயன்படுத்தி இருக்கிறொம் ,
ஆனால் பந்தாவாக யாரும் அதைப் பயன்படுத்தியதில்லை

ஆன்ட்ராய்டுகளும் ஆப்பிள்களும் வந்தாலும் எங்களுக்கு அதுதான் அழகிய மொபைல் காலம் !!
அது ஒரு அழகிய மொபைல் காலம்...!  அது ஒரு அழகிய மொபைல் காலம்...! Reviewed by Unknown on July 24, 2015 Rating: 5

No comments: