Mountain View Mountain View

வன்முறைக் கொள்கையை மட்டுமே எதிர்த்தேன், விடுதலைப் புலிகளையல்ல: வீ. ஆனந்தசங்கரி

வன்முறைக் கொள்கையை மட்டுமே எதிர்த்தேன், விடுதலைப் புலிகளையல்ல: வீ. ஆனந்தசங்கரி

கண்டி சென்றுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மஹாநாயக்கர்களை சந்தித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வீ. ஆனந்தசங்கரி, நாட்டிலுள்ள மக்கள் ஒற்றுமையுடனும் சம உரிமையுடனும் வாழ வேண்டும் என்று எண்ணுகின்ற சமயப் பெரியார்களிடமிருந்து ஆசிர்வாதம் பெறுவது பொருத்தமானது என தான் நினைப்பதாகக் குறிப்பிட்டார்.
தான் ஒரு அகிம்சாவாதி என சுட்டிக்காட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர், விடுதலைப் புலிகளின் வன்முறைக் கொள்கையை மாத்திரமே எதிர்த்ததாகவும் அவர்களை எதிர்த்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.
வன்முறைக் கொள்கையை மட்டுமே எதிர்த்தேன், விடுதலைப் புலிகளையல்ல: வீ. ஆனந்தசங்கரி வன்முறைக் கொள்கையை மட்டுமே எதிர்த்தேன், விடுதலைப் புலிகளையல்ல: வீ. ஆனந்தசங்கரி Reviewed by Unknown on July 23, 2015 Rating: 5

No comments: