Mountain View Mountain View

தங்கத்தை சட்டவிரோதமாக உடலில் மறைத்து கொண்டுசென்ற இலங்கையர் இந்தியாவில் கைது

தங்கத்தை சட்டவிரோதமாக உடலில் மறைத்து  கொண்டுசென்ற இலங்கையர் இந்தியாவில் கைது

ஒரு கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய தங்கத்தை சட்டவிரோதமாக உடலில் மறைத்து
கொண்டுசென்ற ஒருவா் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுநாயக்க சா்வதேச விமான நிலையத்திலிருந்து திருச்சி நோக்கி பயணித்த விமானத்தில் குறித்த சந்தேகநபா் நேற்று மாலை பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இலங்கையா் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் இந்திய சுங்கப்பிரிவினா் மேற்கொண்ட சோதனைகளை அடுத்து சந்தேகநபரின் மலவாயிலிலிருந்து தங்க உருண்டைகள்
மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட குறித்த தங்கத்தின் பெறுமதி 28 இலட்சம் இந்திய ரூபா என
மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தங்கத்தை சட்டவிரோதமாக உடலில் மறைத்து கொண்டுசென்ற இலங்கையர் இந்தியாவில் கைது தங்கத்தை சட்டவிரோதமாக உடலில் மறைத்து கொண்டுசென்ற இலங்கையர் இந்தியாவில் கைது Reviewed by Unknown on July 22, 2015 Rating: 5

No comments: