பொதுத்தேர்தலில் அர்ஜூன ரணதுங்கவிற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடையில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
மேர்வின் சில்வா தெரிவித்ததாவது;
நான் வெற்றி பெறுவது எனக்குத் தெரியும். கம்பஹா மாவட்டத்தில் எனது வாக்குகளை பசில் ராஜபக்ஸ திருடினார். மக்கள் என்னை நேசித்ததால் நான் வாக்குகள் பெற்றேன். நான் களணியில் இல்லை. நான் களணியைக் கையளிக்கின்றேன். உலகக் கிண்ணத்தை இலங்கைக்குக் கொண்டு வந்த, ஊழல் மோசடிகள் அற்ற இவருக்கு ஒப்படைக்கின்றேன்.
பொதுத்தேர்தலில் அர்ஜூன ரணதுங்கவிற்கு ஆதரவளிக்க மேர்வின் சில்வா தீர்மானம் (வீடியோ)
Reviewed by Unknown
on
July 23, 2015
Rating:
Reviewed by Unknown
on
July 23, 2015
Rating:

No comments: