Mountain View Mountain View

செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 8 வது நாடாளுமன்ற அமர்வு !

8வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முதலாவது கூட்டம் செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் டப்ல்யூ.பீ.டீ.தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் முதல் தடவையாக மின்னஞ்சல் முகவரி ஒன்று நாடாளுமன்றில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை விரைவாக வழங்குவதற்காகவும், கடதாசி தாள்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய உறுப்பினர்களுக்காக எதிர்வரும் 23,24 மற்றும் 25ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள தகவல் மாநாட்டில் வைத்து இவ் மின்னஞ்சல் முகவரி வழங்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அரசியலமைப்பு திருத்தச்சட்டம், நிலையியற் கட்டளைகள், சிறப்புரிமைகள் தொடர்பிலான சட்டமூலம் ஆகியவைகள் பதவி பிரமானத்தின் போது வழங்கப்படவுள்ளது.
செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 8 வது நாடாளுமன்ற அமர்வு ! செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 8 வது நாடாளுமன்ற அமர்வு ! Reviewed by Unknown on August 19, 2015 Rating: 5

No comments: