விக்ரம் பிரபு தற்போது வாகா படப்பிடிப்பில் உள்ளார். இதையடுத்து, அவர் ரோமியோ ஜுலியட் படத்தைத் தயாரித்த நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துத்தர சம்மதித்துள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக ஷாம்லியை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கலக்கிய ஷாம்லி தெலுங்கில் ஒரு படத்தில் நாயகியாக நடித்தார். அப்படம் தோல்வியடைந்ததால் படிப்பில் கவனம் செலுத்தினார்.
இப்போதும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. சரியான வாய்ப்புக்காக அவர் காத்திருக்கிறார்.
விக்ரம் பிரபு படத்தில் அவர் நடிப்பாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். இந்தப் படத்தை இயக்கும் கணேஷ் விநாயக் இதற்கு முன் அருள்நிதி நடித்த தகராறு படத்தை இயக்கியவர்.
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறார் ஷாம்லி
Reviewed by Unknown
on
August 23, 2015
Rating:
Reviewed by Unknown
on
August 23, 2015
Rating:


No comments: