Mountain View Mountain View

சித்தாண்டி பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்கம் ! வீடொன்றுக்கு பகுதியளவு சேதம் !

(கதிரவன்)
மட்டக்களப்பு ஏறாவுர்பற்று செயளாலர் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி – 4 , கிராமசேவகர் பிரிவிலுள்ள உதயன்மூலை கிராமத்துக்குள் உட்புகுந்த காட்டு யானை தாக்கியதில் வறிய குடும்பம் ஒன்றின் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
உதயன்மூலை கிராமத்துக்குள் நேற்று (19)இரவு சுமார் 8.00 மணியளவில் உட்புகுந்த காட்டு யானைக் கூட்டம் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்து வீட்டை தாக்கியதில் வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்த குடும்பம் மயிரிழலையில் உயிர்தப்பியுள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த கிராமத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீற்றருக்கு தொலைவிலுள்ள வயல்வெளிகளில் வேளாண்மை அறுவடை முடிந்த பிற்பாடு கடந்த பத்து நாட்களாக குறித்த சித்தாண்டி கிராமத்தின் எல்லைப்பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களுக்கு காட்டு யானை வந்து வீடுகளையும் குடியிருப்புக்களிலுள்ள பயிர்களையும் துவம்சம் செய்து சேதப்படுத்திவிட்டு செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கிராமத்துக்குள் காட்டு யானை இரவுவேளையில் உட்புகுவதினால் மக்கள் வீடுகளில் உறங்குவதற்கு கூட அச்சுவதாக தெரிவிக்கின்றனர்.

சித்தாண்டி மற்றும் அண்மித்த பகுதிகளில் கடந்த காலங்களில் இருந்து காட்டு யானைகளில் தாக்குதலினால் பல உயிர்கள் மற்றும் படுகாயமடைந்தும் உள்ளதுடன் பலத்த சொத்து சேதங்களும் இடம்பெற்ற நிலையிலும் இற்றைவரைக்கும் உரிய அதிகாரிகள் காட்டு யானை வருகையை கட்டுப்படுத்தவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.










சித்தாண்டி பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்கம் ! வீடொன்றுக்கு பகுதியளவு சேதம் ! சித்தாண்டி பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்கம் ! வீடொன்றுக்கு பகுதியளவு சேதம் ! Reviewed by Unknown on August 20, 2015 Rating: 5

No comments: