(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
ஏறாவூர் - சவுக்கடி கரையோர பிரதேசத்தில் குளவிகொட்டியதில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் 10.09.2015 உயிரிழந்துள்ளார்.
ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் க.பொ.த சா.தர வகுப்பில் கல்விகற்றுவந்த சவுக்கடி பிரதேசத்தைச் சேர்ந்த தர்மபாலன் எனோஜினி என்பவரே குளவி கொட்டியதில் உயிரிழந்தவர்.
பாடசாலைவிட்டு துவிச்சக்கர வண்டியில் வீட்டிற்குச் செல்லும்போது பாதையோர பனை மரத்தில் கூடுகட்டியிருந்த குளவிகள் இவரைக் கொட்டியுள்ளன. இதையடுத்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவேளை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவரது உடல்முழுக்க காயங்கள் காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குளவிகொட்டியதில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Reviewed by Unknown
on
September 12, 2015
Rating:

No comments: