தமிழின் எதிரொலி இணையத்துக்காக (ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
உள்ளூராட்சி வாரத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் திணைக்களங்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் அமைச்சர்கள்இ மாகாண சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் ஆகிய குழுவினர் நேரில் விஜயம் செய்து அரச காரியாலங்களின் வேலைத்திட்டங்களின் குறைபாடுகள்இ அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை நேரில் கண்டறியும் நிகழ்ச்சி நிரலின் இரண்டாம் நாளான இன்று புதன் கிழமை நண்பகல்வரை செங்கலடி பிரதேச சபைஇ ஓட்டமவடி பிரதேச சபைஇ ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இது போன்று நாளைஇ மற்றும் நாளை மறுதினம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் மீதமான சகல மாநகர சபைஇ நகர சபை மற்றும் பிரதேச சபைகள்இகல்வித் திணைக்களம்இபோக்குவரத்து அதிகார சபைஇகிராமிய அபிவிருத்தி சபைஇ கைத்தொழில் திணைக்களம்இ சுகாதார திணைக்களம்இ கட்டடத் திணைக்களம் போன்றவற்றுக்கு அவர்கள் தொடர்ந்தும் 4 தினங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இதன்போது சபைகளின் தேவைகள் ஆளணிப்பற்றாக்குறை சம்மந்தமாகவும் ஆட்களை நியமிப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இன்றைய விஜயத்தின்போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம்இ மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னஇ கருணாகரன்இ நடராசாஇ துரை ரட்ணம்இ மற்றும் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்இ உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.சலீம் முதலமைச்சின் காரியாலய அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
முதலமைச்சரின் களப்பயணம் இரண்டாம் நாளின்போது
Reviewed by Unknown
on
September 10, 2015
Rating:

No comments: