8வது பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தன் அவர்களுக்கான பாராட்டு வைபவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.
இதில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவான 11 பாராளுமன்ற உறுப்பினர்களும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரெட்ணசிங்கம், திருமதி சாந்தி ஸ்ரீதரன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
மாலை 4.00 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுடன் ஒன்றுகூடிய இவர்கள் விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டார்கள்.
பின்னர் அங்கிருந்து கடற்படைதள வீதி வழியாக நகர சபை மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இலங்கை தமிழரசுக்கட்சியினர் இவ்வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன். எஸ்.சிறிதரன் இருவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் பாராட்டு விழா
Reviewed by Unknown
on
September 07, 2015
Rating:

No comments: