Mountain View Mountain View

இன்றைய தினம்

இன்றைய தினம்
மன்மத வருடம் – புரட்டாசி 3
செப்டம்பர்
21


ராகு காலம்
4.30 – 6.00
எம கண்டம்
12.00 – 1.30
நல்ல நேரம்
காலை 6.00-7.00 மாலை 3.15-4.15
இன்றைய ராசிபலன்
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துப் போகும்.குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துப் போகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதையும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல் படத் தொடங்குவீர்கள். உங்கள் சகோதர வகையில் நன்மை உண்டு. பயணங் களால் நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
மிதுனம்
மிதுனம்: உங்கள் குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உங்களுக்குஉதவுவார்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். அறிவுப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அமோகமான நாள்.
கடகம்
கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை நீங்கள் கண்டறிவீர்கள். உங்கள் அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.
சிம்மம்
சிம்மம்: உங்களுக்கு பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உங்கள் பிள்ளைகளால் நிம்மதி கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். நீங்கள் வாங்கிய பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகாரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
கன்னி
கன்னி: தன்னிச்சையாக நீங்கள் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். அரசால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. பொதுக்காரியங்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வெற்றி பெறும் நாள்.
துலாம்
துலாம்: குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரை குறையாக நின்ற வேலைகள் முடியும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.நீங்கள் உங்கள் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உற்சாகமான நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
தனுசு
தனுசு: தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் எடுத்தெரிந்து பேச வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். போராடி வெல்லும் நாள்.
மகரம்
மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். உங்களின் வீட்டை விரிவுப்படுத்தி கட்ட நீங்கள் திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.
கும்பம்
கும்பம்: சாதித்துவிடுவோம் என்ற ஒரு நம்பிக்கை உங்களுக்கு பிறக்கும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மீனம்
மீனம்: பிரச்னைகளின் ஆணிவேரை நீங்கள் கண்டறிவீர்கள். உங்கள் பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உங்களின் வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

இன்றைய தினம் இன்றைய தினம் Reviewed by Unknown on September 21, 2015 Rating: 5

No comments: