Mountain View Mountain View

மதுபோதையில் கைகலப்பு ! ஒருவர் வெட்டிக் கொலை ! மாவடிவேம்பில் சம்பவம்

தமிழின் எதிரொலி இணையத்துக்காக (ஏறாவூர்  நிருபர் ஏஎம் றிகாஸ்)


மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் மதுபோதையிலிருந்த இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது ஒருவர் கத்தியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 



சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பிரதேச உதவிப் பொலிஸ் அதியட்சகர் ஐ.கே.ஜி. இஹலவெல தெரிவித்தார்.  


 (06.09.2015)  இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாவடிவேம்பு பாடசாலை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய கோணேசன் ரமேஸ்குமார் என்பவரே சம்பத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றித் தெரிவிக்கப்படுவதாவது – சம்மந்தப்பட்ட இருவரும் மது அருந்திவிட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இவர் உடனடியாக மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆங்கு உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









மதுபோதையில் கைகலப்பு ! ஒருவர் வெட்டிக் கொலை ! மாவடிவேம்பில் சம்பவம் மதுபோதையில் கைகலப்பு ! ஒருவர் வெட்டிக் கொலை ! மாவடிவேம்பில் சம்பவம் Reviewed by Unknown on September 08, 2015 Rating: 5

No comments: