Mountain View Mountain View

கரை ஒதுங்கிய விமான இறக்கை: விபத்துக்குள்ளான மலேசியா விமானத்தின் பாகம் தான்- பிரான்ஸ் உறுதி..!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் புறப்பட்டு சென்றது. ஆனால் வழியில் திடீரென பயணிகளுடன் மாயமானது. இச்சம்பவம் கடந்த ஆண்டு (2014) மார்ச் 8–ந்தேதி நடந்தது.
அந்த விமானம் என்ன ஆனது என தெரியவில்லை. கடலில் விழுந்து இருக்கலாம் என கருதி தேடிப்பார்த்ததும் பாகங்கள் கிடைக்க வில்லை. அதை தொடர்ந்து அந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஜூலை 29–ந்தேதி இந்திய பெருங்கடலில் பிரான்சுக்கு சொந்தமான ரீயூனியன் தீவில் நொறுங்கிய விமானத்தின் இறக்கை பாகம் கரை ஒதுங்கியது.
அதை கைப்பற்றிய பிரான்ஸ் அரசு விமான நிபுணர்கள் மூலம் தீவிரமாக பரிசோதனை செய்தது. தற்போது அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், ‘‘கடலில் கரை ஒதுங்கிய விமான இறக்கை விபத்துக்குள்ளான மலேசியாவின் ‘போயிங் 777’ ரக விமானத்தின் பாகம் தான் என உறுதியாக தெரிய வந்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.
கரை ஒதுங்கிய விமான இறக்கை: விபத்துக்குள்ளான மலேசியா விமானத்தின் பாகம் தான்- பிரான்ஸ் உறுதி..!! கரை ஒதுங்கிய விமான இறக்கை: விபத்துக்குள்ளான மலேசியா விமானத்தின் பாகம் தான்- பிரான்ஸ் உறுதி..!! Reviewed by Unknown on September 05, 2015 Rating: 5

No comments: