Mountain View Mountain View

2015க்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபெறுகள் வெளியீடு - மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம்

2015ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின.

இந்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
இந்தநிலையில் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்க்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம்
2015ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட மட்டத்திலான தேசியப் பாடசாலை அனுமதி புள்ளிகளும் வெளியாகியுள்ளன.
இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு-154 புள்ளிகளும், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, பதுளை, ஆகிய மாவட்டங்களுக்கு 153 புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, அம்பாறை, அநுரதபுரம், பொலநறுவை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 152 புள்ளிகளும், நுவரெலியா, திருகோணமலை, புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு 151 புள்ளிகளும், ஹம்பாந்தோட்டைக்கு 150 புள்ளிகளும் அனுமதிப்புள்ளிகளாக வழங்கப்பட்டுள்ளன.
2015க்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபெறுகள் வெளியீடு - மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம் 2015க்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபெறுகள் வெளியீடு - மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம் Reviewed by Unknown on October 07, 2015 Rating: 5

No comments: