அம்பறை -இறக்காமம் பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த ஒருவரை அம்பாறை விசேட போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் இருந்து 660 கிரேம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
விசேட போதைப் பொருள் ஓழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இறக்காமம் மஜித் வாவி வீதியிலுள்ள குறித்த வீட்டை சோதனையிட்ட போதே கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 35 வயதையுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இறக்காமம் பிரதேசத்தில் 660 கிரேம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
Reviewed by Unknown
on
October 22, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 22, 2015
Rating:


No comments: