Mountain View Mountain View

வெள்ளப்பெருக்கினால் கிரான் - தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கிரான் - தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


வெள்ளப் பெருக்கு காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாந்தகல் மற்றும் தொப்பிகல பிரதேசங்களை அண்மித்த கிராமங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் மற்றும் இராணுவத்தினரினால் இரு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.






வெள்ளப்பெருக்கினால் கிரான் - தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.  வெள்ளப்பெருக்கினால் கிரான் - தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. Reviewed by Unknown on October 27, 2015 Rating: 5

No comments: