Mountain View Mountain View

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி ஆறாவது தினமாக மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.




 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் திருகோணமலை ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கான மக்கள் ஆதரவுப் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழர் நலன்காப்புக் குழுவினரது அழைப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் திருகோணமலை வாழ் அனைத்து மக்கள் சமூகத்தினரும் பங்கேற்றனர்.

இதேவேளை, கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜே.ஜெனார்த்தனன் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய நோயால் இம்மானுவல் உட்பட உறவுகளை இழந்தவர்களும் இந்தப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்திருந்த்தனர்.

இதன்போது, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் ஜனாதிபதி அவர்களே சிறைக்கைதிகள் மீது இரக்கம் காட்டுங்கள் போன்ற வாசகங்களுடனான பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் போராட்டம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் போராட்டம் Reviewed by Unknown on October 18, 2015 Rating: 5

No comments: