Mountain View Mountain View

காலஞ்சென்ற தமிழினியின் இறுதிக்கிரியை செவ்வாய்க்கிழமை நடைபெறும்


புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழீழ விதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி என அழைக்கப்படும் சிவகாமி சிவசுப்பிரமணியம் இன்று காலை காலமாகியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு இணைந்து கொண்ட தமிழினி தனது சிறப்பான செயற்பாடுகள் காரணமாக மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளராக பதவியுயர்வு பெற்றார்.

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்வேலி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழினி, கடந்த 2013ஆம் ஆண்டு வவுனியாவில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று அதிகாலை 3  மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழினியின் பூதவுடலை கிளிநொச்சி பரந்தனில் உள்ள அவரது இல்லத்திற்கு  கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காலஞ்சென்ற தமிழினியின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற தமிழினியின் இறுதிக்கிரியை செவ்வாய்க்கிழமை நடைபெறும் காலஞ்சென்ற தமிழினியின் இறுதிக்கிரியை செவ்வாய்க்கிழமை நடைபெறும் Reviewed by Unknown on October 19, 2015 Rating: 5

No comments: