Mountain View Mountain View

எதிர்த் தரப்பில் இருந்து ஆளுந்தரப்புக்கு மாறிய உறுப்பினர்கள்! கிழக்கு மாகாணசபை அமர்வில்

கிழக்கு மாகாண சபை அமர்வில் 17 உறுப்பினர்களே கலந்து கொண்டதாக கிழக்கு மாகாண சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கிழக்கு மாகாணசபை அமர்வானது செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு சபைத் தலைவர் சந்திரதாச கலப்பத்தி தலமையில் ஆரம்பமானது. அதன் போது ஆளும்தரப்பினர் 10 பேர் மற்றும் எதிர்த்தரப்பினர் 07 பேர் சமூகமளித்திருந்தனர்.

ஆளுந்தரப்பில் அமர்ந்த உறுப்பினர்கள்
இதேவேளை சபை அமர்வானது ஆரம்பித்த போது எதிர்த்தரப்பில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பி.எல். அருன சிறிசேன மற்றும் டி.டி. மெத்தானந்த ஆகியோர் ஆளும் தரப்பில் சேர்ந்து கொண்டதுடன் சபையில் ஆளும் தரப்பின் பக்கம் அமர்ந்தனர்.
ஜனாதிபதியின் அறிக்கை  தொடர்பான விவாதம்
மாகாணசபை உறுப்பினர் என். இந்திரகுமாரினால் முன்வைக்கப்பட்ட தனி நபர் பிரேரணையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல்
கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட முடிவிற்கு கிழக்கு மாகாணசபை ஆதரவு தெரிவித்து அதற்கான ஏகோபித்த ஆதரவினை வழங்கவேண்டும் என தெரிவித்தார.
அது தொடர்பிலான விவாதம் தொடர்ந்தும் இடம்பெற்றதன் பின்னர் குறித்த விடையம் தொடர்பில் மாகாண சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதிக்கு அறிவித்தல் வழங்குவதாக சபைத்தலைவர் தேர்வித்ததை அடுத்து அவ்விவாதம் முடிவுற்றது.
எதிர்த் தரப்பில் இருந்து ஆளுந்தரப்புக்கு மாறிய உறுப்பினர்கள்! கிழக்கு மாகாணசபை அமர்வில் எதிர்த் தரப்பில் இருந்து ஆளுந்தரப்புக்கு மாறிய உறுப்பினர்கள்! கிழக்கு மாகாணசபை அமர்வில் Reviewed by Unknown on October 21, 2015 Rating: 5

No comments: