கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதான வீதியின் அருகில் பனிச்சையடி வாய்க்காலில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதான வீதியின் அருகில் பனிச்சையடிமுன்மாரி வாய்க்காலில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் வயது 38ஐ உடைய மகிழடித்தீவைச் சேர்ந்த அழகையா செனவிரட்ண என இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரியவருகின்றது.
மகிழடித்தீவிலிருந்து தாந்தாமலை, நாற்பதுவட்டைப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே, இவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவரது சடலம் பாலத்துக்கு கீழிருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை 08.30 மணியிலிருந்து இன்று காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலயங்களில் 100.7மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதான வீதியின் அருகில் பனிச்சையடி வாய்க்காலில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
Reviewed by Unknown
on
November 03, 2015
Rating:

No comments: