சட்டவிரோத மீன்பிடி வலைகள் மட்டக்களப்பு வாவியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்ஸான் குரூஸ் தெரிவித்தார்.
இன்று காலையும் நேற்று மற்றும் நேற்று முன்தினமும் மட்டக்களப்பு வாவியில் நாவலடி, முகத்துவாரம், பாமீன்மடு உட்பட பல இடங்களில் கடற்றொழில் அமைச்சினால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிவிட்ட நிலையில் அவர்கள் பாவித்த வலைகள் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட எட்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வலைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக உதவிப் பணிப்பாளர் தெரிவித்ததர்.
தடை செய்யப்பட்ட தங்கூஸ் வலைகள், முக்கூட்டுவலைகள் உட்பட சிறிய கண் வலைகள் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வலைகளைக் கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் மட்டக்களப்பு வாவியில் சிறிய மீன் இனங்கள் அழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத வலைகள் மட்டக்களப்பு வாவியில் கைப்பற்றல்
Reviewed by Unknown
on
November 09, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 09, 2015
Rating:



No comments: