கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா நேற்று 9.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் ஆரம்பமானது.
திருகோணமலை வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக பண்பாட்டு பேரணியுடன் இவ்வைபவமானது ஆரம்பமானது. இப் பேரணி திருஞானசம்பந்தர் வீதி ஊடாக மடத்தடி சந்தியை அடைந்தது அதன் பின் விகாரை வீதி ஊடாக உவர்மலை விவேகானந்தா கல்லூரியை வந்தடைந்தது.
இப்பவனியில் தமிழ் முஸ்லிம் மரபுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மரபுவழி நடனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் நடனங்கள் நடைபெற்றமை முக்கிய அம்சமாகும்.
அதனைத் தொடர்ந்து உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். காலையில் ஆய்வரங்குகளும் மாலை கலை நிகழ்வுகளும் அரங்கேற இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் உற்பட பல அரச அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா கோலாகலமாக ஆரம்பம்
Reviewed by Unknown
on
November 07, 2015
Rating:

No comments: