மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பெருந்துறையில் கிணறு ஒன்றிலிருந்து 16 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருப்பெருந்துறை அன்னை வேளாங்கன்னி வீதியில் அமைந்துள்ள குறித்த கிணற்றிலிருந்து இன்று காலை இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி வீட்டிலிருந்து சென்ற குறித்த இளைஞன் வீடு திரும்பாத நிலையில் சனிக்கிழமை கிணற்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த இளைஞர் மனவளர்ச்சி குன்றியவர் என பிரதேச கிராம சேவை அதிகாரி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு
Reviewed by Unknown
on
November 08, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 08, 2015
Rating:


No comments: