Mountain View Mountain View

அம்பாறையில் அடைமழை

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் மழையினால் பிரதேச வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ள நீர் உயர ஆரம்பித்துள்ளது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால் மீனவர்களின் மீன்பிடிப் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிப்பதோடு மீன்பிடிப் படகுகள் வாழைச்சேனை மற்றும் ஒலுவில் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருவதனால் பிரதேசங்கள் இருள் நிறைந்து காணப்பட்டதுடன் இரவு வேளைகளில் மின் தடைகளும் ஏற்பட்டு வருகின்றது. இதனால் பரிட்சைகளுக்கு தயாராகும் மாணவர்கன் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றதாகவும் கூறுகின்றனர்.
அம்பாறையில் அடைமழை அம்பாறையில் அடைமழை Reviewed by Unknown on December 01, 2015 Rating: 5

No comments: