தேசிய பொங்கல் விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது

இவ்விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதம அதிதியாக கலந்து கொள்வர்.
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய பொங்கல் விழா நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய பொங்கல் விழாவையொட்டி வலி.வடக்கு பகுதியில் 701.5 ஏக்கர் காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமையை முன்னிட்டு வலி.வடக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளன.
இந் நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் .
யாழ். நகரில் தேசிய பொங்கல் விழா! ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு!
Reviewed by Unknown
on
December 31, 2015
Rating:
Reviewed by Unknown
on
December 31, 2015
Rating:

No comments: