அனைவருக்கும் ஒளிமயமாக, அர்த்தபூர்வமாக நத்தார் தினம் அமைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு என்பவற்றுடன் தெய்வீகத்தன்மை ஐக்கியப்படும் முறையை கற்றுக்கொடுத்த இயேசு நாதரின் பிறப்பைக் மகிமை கொண்டாடும் நிகழ்வு நத்தார் தினம் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவ புத்திரரின் பிறப்பை கொண்டாடும் நாம், அவருடைய வாழ்வு முன்மாதிரி மூலம் எமது வாழ்வையும் கட்டியெழுப்ப முயற்சியெடுக்கவேண்டும் பிரதம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தற்கால சமூகம் வேண்டி நிற்பதும் இன, மத, பேதத்திற்கு அப்பால் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி நிலைநாட்டப்படும் சிறந்த ஒரு தேசத்தையாகும்.
எனவே அதற்காக ஒன்றுபட்டு, ஒரே மனதுடன் செயற்படுவது எமது கடமையாகும் என கூறிய பிரதமர் நத்தார் தினத்தைக் கொண்டாடும் எம் அனைவருக்கும் அப்போதுதான் நத்தாரை அர்த்தபூர்வமானதாக மாற்றிக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
நத்தார் தினம் அனைவருக்கும் ஒளிமயமாக, அர்த்தபூர்வமாக அமைய வேண்டும் என பிரதமர் தெரிவிப்பு.
Reviewed by Unknown
on
December 25, 2015
Rating:
Reviewed by Unknown
on
December 25, 2015
Rating:


No comments: