அடுத்தவரை நேசிக்கக் கற்றுக் கொள்வோம் என்ற இயேசுநாதரின் போதனையின் அடிப்படையில் அனைவரும் செயற்படுவதன் ஊடாக இனநல்லிணக்கத்தை கட்டியெழுப்பலாம் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நத்தார் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைதி, கருணை போன்ற நற்பண்புகளை எமக்குள் வளர்த்துக் கொள்வதன் ஊடாக மட்டுமே நத்தார் கொண்டாட்டங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
அடுத்தவர் மீது அன்பும் கருணையும் காட்டுமாறு போதித்துள்ள இயேசுநாதரின் போதனையின் அடிப்படையில் கடந்த காலங்களில் நாங்கள் இனநல்லிணக்கத்துக்கான பாரிய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம்.
அத்துடன் சிறுபிள்ளைகளின் மனங்களில் அமைதியும், மகிழ்ச்சியையும் வளர்த்தெடுப்பதும் நத்தார் கொண்டாட்டங்களின் ஒரு நோக்கமாக இருக்க வேண்டும். அதன் மூலமாக மட்டுமே நத்தாரை அர்த்தபூர்வமான முறையில் கொண்டாடியவர்களாக நாம் மாற முடியும்.
உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சௌபாக்கியம் நிறைந்த நத்தார் தின வாழ்த்துக்கள் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அடுத்தவரை நேசிக்கக் கற்றுக் கொள்வோம்: மஹிந்தவின் நத்தார் தினச் செய்தி
Reviewed by Unknown
on
December 25, 2015
Rating:
Reviewed by Unknown
on
December 25, 2015
Rating:


No comments: