Mountain View Mountain View

தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் சுமார் 250 பேர் திடீர் சுகயீனம்

பலாங்கொடை, எல்லஹராவ பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் சுமார் 250 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு விஷமானமையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை வேளை தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதை அடுத்தே அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் நோய் அறிகுறியுடன் இருக்கும் பலர் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் சுமார் 250 பேர் திடீர் சுகயீனம் தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் சுமார் 250 பேர் திடீர் சுகயீனம் Reviewed by Unknown on January 02, 2016 Rating: 5

No comments: