Mountain View Mountain View

மட்டு- சித்தாண்டி பிரதேசத்தில் இனத்தெரியாதோரால் பல குடியிருப்புக்கள் நாசம்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி -1 மற்றும் மாவடிவெம்பு ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குப்பட்ட பொது மக்களின் குடியிருப்பு பகுதிகளில் அத்துமீறி உள் நுளைந்த ஒரு குழுவினர் அங்கு அமைத்துள்ள குடிசைகள் பலவற்றை உடைத்து நாசமாக்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, குடியிப்புக்களில் உள்ள பயிர்களையும் வெட்டி பிடிங்கி எரிந்ததுடன் வேலிகளையும் பிடிங்கி எரிந்துள்ள சம்பவமொன்று நேற்று முந்தினம் வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

குறித்த பகுதி தனக்கு சொந்தமானது என்று உள் நுளைந்த ஒரு குழுவினர் குறித்த பகுதியில் குடியிருப்பவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும்,
வெளியேறாவிட்டால் குடிசைகளை எரிப்போம் எனவும், குறித்த பகுதிகளில் குடிசைகளை அமைத்துக் கொண்ட மக்களை அச்சுறுத்தி மிரட்யுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் சினிமா படங்களில் தான் இவ்வாறான ஒரு செயற்பாட்டை கண்டு இருக்கின்றோம், ஆனால் அதே சம்பவம் இன்று எங்களுக்கு நேரடியாக நடந்துள்ளது.
குறித்த நிலப்பகுதி தனக்கு சொந்தமானது என்று வந்த பெண் தன்னுடன் பல குண்டர்களை கொண்டுவந்து குடியிருப்புக்களை பிரித்து எரிந்தனர் என தெரிவித்தனர்.
நாங்கள் நிலத்தின் உரிமையாளர் ஊடாக உரிய முறையில் தேவையான நிலத்தை அளந்து அதற்கான பெறுமதியை கொடுத்து உறுதிப்பத்திரம் கூட சட்டபூர்வமாக தங்களிடம் இருப்பதாக தெரிவித்தனர்.
குறித்த காணிகளுக்கு ஒவ்வொருவரும் சட்டபூர்வமாக உறுதிப்பத்திரம் முடித்து எட்டு வருடம் கடந்துள்ளது.
நாங்கள் சித்தாண்டியில் தாழ் நில பிரதேசங்களில் இருப்பவர்கள் எங்கள் பகுதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுவதினால் நாங்கள் அடிக்கடி இடப்பெயர்வுக்கு உள்ளாகுவதினால் இந்த காணியை வாங்கி அதற்கு அதிக பணம் செலவு செய்து துப்பரவு செய்து வேலி, குடிசை மற்றும் வீட்டுப் பயிர்கள் வளர்த்து பராமரித்து வந்தவேளை எங்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிசாருக்கு பொலிசாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.




மட்டு- சித்தாண்டி பிரதேசத்தில் இனத்தெரியாதோரால் பல குடியிருப்புக்கள் நாசம் மட்டு- சித்தாண்டி பிரதேசத்தில் இனத்தெரியாதோரால் பல குடியிருப்புக்கள் நாசம் Reviewed by Unknown on January 02, 2016 Rating: 5

No comments: