2015ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளது.
இந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk முகவரியில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் வெளியிடப்படவுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் அனைத்தையும் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பதோடு தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் அனைத்தையும் அவர்களின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
நாளை க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் !
Reviewed by Unknown
on
January 02, 2016
Rating:
Reviewed by Unknown
on
January 02, 2016
Rating:


No comments: