Mountain View Mountain View

தீர்வுகாணப்பட்டால்தான் புத்தாண்டு சுபமாய் அமையும்! JVP தெரிவிப்பு

த்தாண்டு முதல் நாளில் வாழ்த்துச் சொல்வதால் மக்கள் வாழ்வு சுகவாழ்வாகிவிடாது. நாட்டிலுள்ள அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகளை மக்கள் மீது சுமத்தாமல் தீர்வு கண்டால்தான் புத்தாண்டு சுபமாய் அமையும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

உண்மையாகவே மக்கள் வெற்றியடையும் புதிய அரசியல் பாதையை உருவாக்க வேண்டும் என்றும், அதற்காக பாரிய மக்கள் சக்தி உருவாகவேண்டும் என்றும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு ஜே.வி.பி. விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
"2015ஆம் ஆண்டு முடிவடைந்து 2016ஆம் ஆண்டு புதுவருடம் பிறந்துள்ளது. நாட்டு மக்களுக்கு பல சவால்களுடனேயே இந்தப் புது வருடம் பிறந்துள்ளது. நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது. வரவு - செலவுத் திட்டத்தில் 740 பில்லியன் ரூபா துண்டுவிழும் தொகையுடனேயே (பற்றாக்குறை) புதுவருடத்தில் அடியெடுத்து வைக்கின்றோம். அதற்கு முகங்கொடுப்பதற்கும் புதிய பொருளாதார உபாயமார்க்கம் ஆட்சிகளிடம் இல்லை. இதனால், புதுவருடத்தில் பொருளாதாரச் சுமையை மக்கள் மீது சுமத்தும் நிலையே அமையும். மக்களுக்கான மானியம் இல்லாதுபோகும்.
மறுபக்கத்தில் நாடு சமூக பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது. நாளுக்குநாள் குற்றங்கள் அதிகரிக்கின்றன. வாகன விபத்துகள், தற்கொலைகள் அதிகரிக்கின்றன. ஊழல், மோசடி பழைமை போன்றே உள்ளன. சூழல் பாதிப்படைகின்றது. இவற்றால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
வாழ்த்துத் தெரிவிப்பதனூடாக மட்டும் மக்களுக்கு சுப வருடம் சுபமானதாக அமையாது. கடந்த காலம் முழுவதும் புதுவருடத்தின் முதல் நாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டபோதும், மக்களுக்கு ஒருபோதும் அவை சுபமானதாக அமையவில்லை.
இதற்கமைய 2016 ஆம் ஆண்டை உண்மையான சுப வருடமாக உருவாக்கிக்கொள்ள நாட்டுமக்கள் அரசியல் பயணத்தை புதிய திசைக்குத் திருப்பவேண்டும். உண்மையாகவே மக்கள்  வெற்றியடையும் அரசியல் பாதையில் அனைவரும் இணைய வேண்டும். பழைய அரசியல் தீர்மானங்களை மாற்றி, புதுவருடத்திலிருந்து புதிய அரசியல் தீரமானங்களை எடுக்க தையரியமளிப்பதாக இருக்கவேண்டும். நாட்டை உண்மையான வெற்றியை நோக்கி, பழைய  சமூகத்திற்குப் பதிலாக புதிய சமூகத்தைக் கட்டியெழுப்பத் தயாராக வேண்டும். அதற்காக பாரிய மக்கள் சக்தி உருவாகவேண்டும். இவ்வாறு நடந்தால்தான் புது வருடம் சுப வருடமாக அமையும். இலங்கையர் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துகள்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தீர்வுகாணப்பட்டால்தான் புத்தாண்டு சுபமாய் அமையும்! JVP தெரிவிப்பு தீர்வுகாணப்பட்டால்தான் புத்தாண்டு சுபமாய் அமையும்! JVP தெரிவிப்பு Reviewed by Unknown on January 01, 2016 Rating: 5

No comments: