Mountain View Mountain View

இந்து ஆலயத்தில் திருட்டு !

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், ஆலயத்தின் கூரை பிரிக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை வழமைபோன்று பூஜை வழிபாட்டிற்குசென்ற பூசகர் சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் கிளிநொச்சி - குமரபுரம் முருகன் ஆலயத்திலும் பெறுமதி மிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து ஆலயத்தில் திருட்டு ! இந்து ஆலயத்தில் திருட்டு ! Reviewed by Unknown on January 06, 2016 Rating: 5

No comments: