Mountain View Mountain View

அமெரிக்காவின் ஆலோசனைக்கமையவா மைத்திரிபாலவிற்கு வாக்களித்தனர் – சஜித் கேள்வி

அமெரிக்காவின் ஆலோசனைக்கமையவா மைத்திரிபாலவிற்கு வாக்களித்தனர் – சஜித் கேள்வி
ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாச கடுவனவில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலரின் பங்கேற்புடன் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, நோர்வே, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் தம்மைத் தோற்கடித்ததாக மஹிந்த ராஜபக்ஸ தற்போது நாட்டிற்குக் கூறி வருகின்றார் என குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்நாட்டிலுள்ள 62 இலட்சம் மக்கள் இங்கிலாந்து, நோர்வே, அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்கிய ஆலோசனைக்கு அமையவா மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தார்கள் என கேள்வியெழுப்பினார்.

அமெரிக்காவின் ஆலோசனைக்கமையவா மைத்திரிபாலவிற்கு வாக்களித்தனர் – சஜித் கேள்வி அமெரிக்காவின் ஆலோசனைக்கமையவா மைத்திரிபாலவிற்கு வாக்களித்தனர் – சஜித் கேள்வி Reviewed by Unknown on July 23, 2015 Rating: 5

No comments: