Mountain View Mountain View

உலக சாம்பியன்ஷிப்: ஆடவருக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் உசைன் போல்ட் வெற்றி

உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளில் ஆடவருக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் வெற்றிபெற்றுள்ளார்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்றுவரும் உலக சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளில் ஆடவருக்கான 200 மீற்றர் ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.
போட்டியில் ஜமைக்காவின் உசைன் போல்ட், அமெரிக்காவின் டைசன் கே உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்குபற்றினர்.
போட்டியை முதல் வீரராகப் பூர்த்திசெய்த போல்ட், அதற்காக 19.55 செக்கன்ட்களை எடுத்துக்கொண்டார்.
இது இந்தப் போட்டிப் பிரிவில் இவ்வருடத்துக்கான அவரது சிறந்த காலப்பெறுதியாகும்.
19.74 செக்கன்ட்களில் போட்டியைக் கடந்த ஜஸ்டின் கெட்லின் இரண்டாமிடத்தை அடைந்தார்.
மூன்றாமிடத்தை தென் ஆபிரிக்காவின் அனாசோ ஜொபொட்வானா பெற்றார்.
இந்தப் போட்டிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டத்திலும் போல்டே வெற்றிபெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
உலக சாம்பியன்ஷிப்: ஆடவருக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் உசைன் போல்ட் வெற்றி உலக சாம்பியன்ஷிப்: ஆடவருக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் உசைன் போல்ட் வெற்றி Reviewed by Unknown on August 28, 2015 Rating: 5

No comments: