Mountain View Mountain View

ப்ரூஸ் லீயின் நாயகியாகிறார் நயன்தாரா !

பிரசாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ப்ரூஸ் லீ’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரூஸ் லீ படத்தை இயக்கும் பிரசாந்த், இயக்குநர் பாண்டிராஜிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
இப்படத்திற்கு பாண்டிராஜ் வசனம் எழுத, கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இன்னும் இப்படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
நயன்தாராவிற்கு கதை பிடித்து விட்டதாகவும், விரைவில் அவர் நாயகியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ப்ரூஸ் லீயின் நாயகியாகிறார் நயன்தாரா ! ப்ரூஸ் லீயின் நாயகியாகிறார் நயன்தாரா ! Reviewed by Unknown on August 28, 2015 Rating: 5

No comments: