Mountain View Mountain View

சம்பூர் மீள்குடியேறியவர்களுக்கு உதவ உலக உணவுத்திட்டம் முன்வந்துள்ளது!

சம்பூரில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் மீளக்குடியேறியவர்களுக்கு உலர் உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க உலக உணவுத்திட்டம் முன்வந்துள்ளது.



இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கடந்த 2012ம் ஆண்டு உலக உணவுத்திட்டம் தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டிருந்தது. இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு துணை அமைப்பாகும்.

இந்நிலையில் அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் சம்பூரில் மீளக் குடியேறியுள்ளவர்களுக்கு ஒன்றரை மாத காலம் வரையான உலர் உணவு மற்றும் நான்கு மாதங்கள் வரை மீள்குடியேற்றநிவாரண நிதியும் வழங்க உலக உணவுத்திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பூர் அகதிகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக யாழ்பபாண அகதிகளுக்கு சேர்த்து இந்தச் செயற்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 1428 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.

யாழில் 1,194 மற்றும் சம்பூரில் 234 குடும்பங்களும் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பூர் மீள்குடியேறியவர்களுக்கு உதவ உலக உணவுத்திட்டம் முன்வந்துள்ளது! சம்பூர் மீள்குடியேறியவர்களுக்கு உதவ உலக உணவுத்திட்டம் முன்வந்துள்ளது! Reviewed by Unknown on August 27, 2015 Rating: 5

No comments: