Mountain View Mountain View

சுற்றறிக்கையை மீறி பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொண்ட அதிபர்கள் தொடர்பில் விசாரணை !

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை மீறும் வகையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொண்டுள்ள மூன்று அதிபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் விசாரணைக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றிலும் தென் மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்றிலும் வட மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்றிலுமே இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றறிக்கையை மீறி பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொண்ட அதிபர்கள் தொடர்பில் விசாரணை ! சுற்றறிக்கையை மீறி பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொண்ட அதிபர்கள் தொடர்பில் விசாரணை ! Reviewed by Unknown on August 27, 2015 Rating: 5

No comments: