இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு பி. சரவணமுத்து விளையாட்டு திடலில் இன்றைய போட்டி நடைபெறவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியுடன், இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்கக்கார ஓய்வு பெறுகிறார்.
இதற்கிடையில், இந்த போட்டியில் இந்திய அணியின் சிக்கார் தவான் காயம் காரணமாக பங்கேற்கமாட்டார்.
இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றிருந்தது.
இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆசஸ் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியும் இன்று ஆரம்பமாகிறது.
இந்த தொடரை ஏற்கனவே இங்கிலாந்து அணி 3க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இன்றைய போட்டியுடன் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சங்ககாரவின் இறுதி சர்வதேச போட்டி இன்று !
Reviewed by Unknown
on
August 20, 2015
Rating:
Reviewed by Unknown
on
August 20, 2015
Rating:


No comments: