Mountain View Mountain View

நெல் கொள்வனவு தகவல்கள் இணையத்தளத்தில்! நெல் சந்தைப்படுத்தல் சபை

நெல் கொள்வனவு தொடர்பிலான தகவல்களை இணைத்தளத்தில் வெளியிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நெல்கொள்வனவு நடவடிக்கையின்போது ஏற்படக்கூடிய முறைகேடுகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல்லின் அளவு, விவசாயிகளின் விபரம் போன்ற அனைத்து தகவல்களும் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் புதுப்பிக்கப்படும் இந்த தகவல்களை நெல் சந்தைப்படுத்தல் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை சிறுபோகத்தின்போது 12,000 இற்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து 22,664 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவு தகவல்கள் இணையத்தளத்தில்! நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவு  தகவல்கள் இணையத்தளத்தில்! நெல் சந்தைப்படுத்தல் சபை Reviewed by Unknown on August 20, 2015 Rating: 5

No comments: