ஆந்திராவில் அரசு மருத்துமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை எலி கடித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், குண்டூர் மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு சிறுநீர் நோய் தொற்று இருப்பதாகக் கூறி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
இதையடுத்து அந்த குழந்தை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு குழந்தையின் கை விரலை எலி கடித்ததாக குழந்தையின் பெற்றோர் டாக்டர்களிடம் தெரிவித்தனர். இதனால் அந்த அறையில் எலி பிடிக்கும் கருவி வைக்கப்பட்டது.
எனினும், அதில் சிக்காத எலி மீண்டும் குழந்தையை கடித்ததால் அக்குழந்தை பரிதாபமாக பலியானது. இதனால், உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புகார் அளித்துள்ளனர். எனினும், டாக்டர்கள் இந்த புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். சிறுநீர் நோய் தொற்று காரணமாகவே குழந்தை பலியானதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மருத்துவமனையில் பரிதாபம் - அவசர சிகிச்சை பிரிவில் எலி கடித்து பச்சிளம் குழந்தை பலி!
Reviewed by Unknown
on
August 27, 2015
Rating:
Reviewed by Unknown
on
August 27, 2015
Rating:

No comments: