Mountain View Mountain View

இலங்கை வந்தடைந்தார் நிஷா பிஷ்வால்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெ­ரிக்க பிரதி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா தேசாய் பிஷ்வால் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளார்.



நிஷா பிஷ் வால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட பல்­வேறு முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் விசேட சந்­திப்­புக்­களை நடத்தவுள்ளார்.
இன்று காலை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நிஷா பிஷ்வால் வெளிவிவகார அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன் நாளைய தினம் காலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூது­வரின் வாசஸ்­த­லத்தில் விசேட பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் வெளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான செய­லா­ளரும் யாழ்.தேர்தல் மாவட்­டத்தின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகத் தெரிவு செய்­யப்­பட்­ட­வ­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.
இச்­சந்­திப்­பின்­ போது ஆட்சி மாற்­றத்­திற்குப் பின்­ன­ரான நிலை­மைகள், சம­கால அர­சியல் நிலை­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
இதே­வேளை எதிர்­வரும் செப்­டெம்பர் 14ஆம் திக­தி­யன்று ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பான விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
இந்­த­அ­றிக்கை சகல வித­மான சாட்­சி­யங்­க­ளையும் உள்­ள­டக்­கிய வலு­வான அறிக்­கை­யாக அமைந்­தள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது.அதே­நேரம் இலங்­கையில் பொதுத் தேர்தல் இடம்­பெற்று பாரா­ளு­மன்ற கன்னி அமர்வே இடம்­பெ­றாத நிலையில் அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் உள்­ளிட்ட உய­ர­தி­கா­ரிகள் இலங்­கைக்கு விஜயம் செய்­கின்­ற­விஜயம் செய்கின்றனர்.கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதுல் கேஷாப் தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வந்தடைந்தார் நிஷா பிஷ்வால்!  இலங்கை வந்தடைந்தார் நிஷா பிஷ்வால்! Reviewed by Unknown on August 25, 2015 Rating: 5

No comments: