Mountain View Mountain View

இலங்கை மத்திய வங்கிக்கு 1.1 பில்லியன் டொலர்களை வழங்கியது இந்திய ரிசேவ் வங்கி

இந்திய ரிசேவ் வங்கியிடம் இருந்து இலங்கை மத்திய வங்கி 1.1 பில்லியன் டொலர்களை பெற்றுள்ளது.

நாணய பரிமாற்று உடன்படிக்கையின்கீழ் இந்த நிதி கிடைத்துள்ளது என்று தெ ஹிந்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை கடந்த ஜூலை 17ஆம் திகதியன்று கையெழுத்தானது.

இதற்கு மேலதிகமாக 2015 ஏப்ரலில் மத்திய வங்கி, 400 மில்லியன் ரூபாய்களை இந்திய ரிசேவ் வங்கியிடம் இருந்து பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணய பரிமாற்றத்தை நிலையாக வைத்துக்கொள்வதற்காகவே இந்த நிதியுதவியை இந்திய ரிசேவ் வங்கி இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கியுள்ளது.
இலங்கை மத்திய வங்கிக்கு 1.1 பில்லியன் டொலர்களை வழங்கியது இந்திய ரிசேவ் வங்கி இலங்கை மத்திய வங்கிக்கு 1.1 பில்லியன் டொலர்களை வழங்கியது இந்திய ரிசேவ் வங்கி Reviewed by Unknown on September 05, 2015 Rating: 5

No comments: