சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு, அரசாங்க அதிகாரிகளை அனுப்பி வைக்கப் போவதில்லை என புதிய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
30ம் அமர்வுகளில் இலங்கையிலிருந்து எந்தவொரு அரசாங்க அதிகாரியையும் அனுப்பி வைக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் மட்டும் இலங்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பிரதிநிதித்துவம் செய்ய உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா அறிவித்தனைத் தொடர்ந்து இலங்கை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த மாத இறுதியில் இலங்கை போர்க்குற்ற விசாரணை அறிக்கையை மனித உரிமைப் பேரவை வெளியிடவுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் உலக நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என அரசாங்கம், ஊகித்துள்ளமையும் இவ்வாறு பிரதிநிதிகளை அனுப்பி வைக்காமைக்கான காரணமாகும்.
எவ்வாறெனினும் கடந்த காலங்களில் மஹிந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளுக்காக இலங்கையிலிருந்து உயர்மட்ட அதிகாரிகள் பலர் கொண்ட பிரதிநிதிகள் குழுக்களை அனுப்பி, விளக்கம் அளித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெனீவா அமர்வுகளுக்கு அதிகாரிகளை அனுப்புவதில்லை என இலங்கை அரசாங்கம் தீர்மானம் !
Reviewed by Unknown
on
September 01, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 01, 2015
Rating:


No comments: