Mountain View Mountain View

மட்டக்களப்பில் புதையல் தோண்டிய மூவர் கைது

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் புதையல் தோண்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றிரவு 8.20 அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் களுவாஞ்சிக்குடி நீதவான் முன்னிலையில் இன்று (06) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் புதையல் தோண்டிய மூவர் கைது மட்டக்களப்பில் புதையல் தோண்டிய மூவர் கைது Reviewed by Unknown on September 06, 2015 Rating: 5

No comments: