Mountain View Mountain View

கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வருவதை எதிர்க்கும் உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்பட முயற்சிப்பது தொடர்பில், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட்ட 14 உறுப்பினர்கள், தற்போது எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளனர்.

இவர்கள் 16 ஆசனங்களை கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை கோரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைமையை கோருவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்த வரையில் அது ஒரு வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிராந்தியக்கட்சியாகும். அது நாட்டுக்கு புறம்பான வேலைத்திட்டத்தை கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் ஏனைய எதிர்க்கட்சிகளை காட்டிலும் அதிக ஆசனங்களை கொண்டிப்பதைக்கொண்டு அதற்கு எதிர்க்கட்சி தலைமையை வழங்க முடியாது என்பது கம்மன்பிலவின் வாதமாக உள்ளது.
கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வருவதை எதிர்க்கும் உறுப்பினர்கள் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வருவதை எதிர்க்கும் உறுப்பினர்கள் Reviewed by Unknown on September 03, 2015 Rating: 5

No comments: