Mountain View Mountain View

மின் கட்டணங்களுக்கான விலைச் சுட்டெண்ணை தயாரிக்க நடவடிக்கை

மின் கட்டணங்களுக்கான விலை சுட்டெண்ணை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிடுகின்றது.
சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை மற்றும் எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைவதன் நன்மைகளை உரியவாறு பாவனையாளர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமென அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ். படகொட தெரிவிக்கின்றார்.
சர்வதேச சந்தையில் நிலக்கரி மற்றும் எரிபொருளின் விலைகள் தற்போது ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதன் நன்மைகளை பாவனையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இதன் பிரகாரம் அரசாங்க கொள்கையின் அடிப்படையில் எரிபொருள் மற்றும் மின் கட்டணங்களுக்கான விலைச் சுட்டெண்ணை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
மின் கட்டணங்களுக்கான விலைச் சுட்டெண்ணை தயாரிக்க நடவடிக்கை மின் கட்டணங்களுக்கான விலைச் சுட்டெண்ணை தயாரிக்க நடவடிக்கை Reviewed by Unknown on September 08, 2015 Rating: 5

No comments: